TNPSC Thervupettagam

AFSPA – அருணாச்சலப் பிரதேசம்

April 5 , 2019 2313 days 709 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 9 மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களிலிருந்து விமர்சனத்திற்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA - Armed Forces Special Powers Act) திரும்பப் பெறுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
  • குடிமைப் பணியாளர்களுக்கு உதவுவதற்காக ஆயுதப் படைகள் தேவைப்படும் பகுதிகளில் AFPSA பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • AFSPA சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ் யூனியன் பிரதேசத்தின் ஆட்சியாளர் அல்லது மாநில அரசு அல்லது மத்திய அரசு ஆகியவற்றினால் “பாதிக்கப்பட்ட இடங்கள்” என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இச்சட்டம் பொருந்தும்.
  • 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேசம் தனி மாநிலமாக உருவெடுத்துள்ளது. அன்றிலிருந்து AFSPA சட்டமானது அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.
AFSPA
  • AFSPA ஆனது 1942 ஆம் ஆண்டின் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் அவசரநிலைச் சட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • “பாதிக்கப்பட்ட பகுதிகளாக” அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ஆயுதப் படைகள் செயல்படுவதற்கு முழு அதிகாரங்களை அளிக்கக்கூடிய இந்தச் சட்டமானது இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டதாகும்.
  • AFSPA சட்டங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.
REGION STATUS
Armed Forces Special Powers (Assam and Manipur) Act, 1958 (Extended to all 7 North East states later) Tripura, Meghalaya – Withdrawn Rest of the States - Partially   Withdrawn
The Armed Forces (Punjab and Chandigarh) Special Powers Act, 1983 Withdrawn in 1997
The Armed Forces (Jammu and Kashmir) Special Powers Act, 1990 Active
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்