AI மற்றும் பருவநிலைத் தகவல்கள் குறித்த யுனெஸ்கோ-UCL அறிக்கை
November 20 , 2026 10 hrs 0 min 45 0
2026 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட யுனெஸ்கோ-லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) அறிக்கையில், பயனர்கள் கேள்வி எழுப்பும்போது செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகள் நிறுவப்பட்ட பருவநிலை உண்மைகளைப் பெரும்பாலும் கைவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் ஒன்பது பருவநிலைத் தரவுத் தொகுப்புகள், 13 மொழிகள் மற்றும் 656 பருவநிலைக் கொள்கைக் கேள்விகளில் 33 AI மாதிரிகளைச் சோதனை செய்தனர்.
பயனர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் AI துல்லியம் 31 முதல் 35 சதவீதப் புள்ளிகள் வரை குறைந்துள்ளது; இதில் சுமார் 80% விட்டுக் கொடுப்புகள் முதல் கருத்து வேறுபாட்டிற்குப் பிறகே நிகழ்ந்துள்ளன.
தனிப்பட்ட பருவநிலைக் கொள்கை விளைவுகளில் இந்த மாதிரிகள் 94.5% துல்லியத்தை எட்டிய போதிலும், கொள்கைகளுக்கு இடையிலான தொடர்புகளில் 33.8% துல்லியத்தை மட்டுமே பெற்றுள்ளன.
சராசரி துல்லியம் ஆங்கிலத்தில் 88.6% ஆகவும், வங்காளம் மற்றும் இந்தியில் 83.6% ஆகவும், உருதுவில் 81.4% ஆகவும், சுவாஹிலியில் 78.3% ஆகவும் பதிவாகியுள்ளது.