தேசிய நோயெதிர்ப்பியல் நிறுவனத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது கழலை எதிர்ப் பொருள் மருந்தான (ஆன்டிஜென்) SPAG9 எனும் தனது மருந்திற்காக வேண்டி ASPAGNII என்ற வர்த்தக முத்திரையைப் பெற்றுள்ளது.
SPAG9 ஆனது 1998 ஆம் ஆண்டில் டாக்டர் அனில் சூரி என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.
தற்போது வரை கர்ப்பப்பை வாய், கருப்பைப் புற்றுநோய் போன்றவற்றிற்கான டென்ட்ரிக் செல் அடிப்படையிலான நோயெதிர்ப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வரும் ASPAGNII மருந்தானது மார்பகப் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்பட உள்ளது.