TNPSC Thervupettagam

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் - இரண்டு இடங்கள் பின்தங்கிய இந்தியா

June 9 , 2021 1522 days 660 0
  • இந்த தரவரிசையில் கடந்த ஆண்டின் நிலையிலிருந்து இரண்டு இடங்கள் பின்தங்கி இந்தியா 117வது இடத்தில் உள்ளது. 
  • 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் 193 உறுப்பினர் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட 2030 செயல்பாட்டு நிரல்களின் அங்கமான 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals – SDG) அமல்படுத்துவதில் இந்தியா இந்த நிலையில் உள்ளது.
  • பூடான், நேபாளம், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நான்கு தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த SDG மதிப்பானது நூற்றுக்கு 61.9 ஆகும்.
  • ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியவை 2030 ஆம் ஆண்டுக்குள் SDG இலக்குகளை அடைவதற்கு  குறைந்தபட்ச அளவிலான தயார்நிலையிலேயே உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • 180 நாடுகளை மதிப்பிடும் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா 168வது இடத்தில் உள்ளது எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்