TNPSC Thervupettagam

ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான விதிமுறைகள்

June 9 , 2021 1522 days 614 0
  • ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையிலோ (அ)  ஆலோசனை சேவை (சுயவேலை) அடிப்படையிலோ நியமனம் செய்வதற்கு முன்னர் ஊழல் தடுப்புப் பிரிவின் நற்சான்றிதழைப் பெறுவதற்கான ஒரு வரையறுக்கப்பட்ட செயல்முறையை மத்திய ஊழல் தடுப்பு ஆணையமானது (Central Vigilance Commission – CVC) வகுத்து உள்ளது.

செயல்முறை

  • ஒருவரை நியமனம் செய்வதற்கு முன் அவர் எந்த வேலை நியமன அமைப்பிலிருந்து ஒய்வு பெற்றாரோ அந்த அமைப்பிலிருந்து நற்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  • ஓய்வு பெற்ற அதிகாரி, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றியிருந்தால், அவர் ஓய்வு பெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பணியமர்த்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் நற்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றை வேண்டுவது தொடர்பான ஒரு தகவல் தொடர்பும் CVC அமைப்பிற்கு அனுப்பப் பட வேண்டும்.
  • அந்த அதிகாரி ஏதேனும் ஒரு ஊழல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் (ஊழல் தடுப்பு ஆணையத்தினால் அதிலிருந்து விடுதலை செய்யப் படாதிருந்தால் பின்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முந்தைய வேலை நியமன அமைப்பே பொறுப்பேற்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்