ஆட்சிப்பணியாளர்களின் ஓய்வூதிய விதிகள் திருத்தம் – மத்திய அரசு
June 10 , 2021 1521 days 571 0
பணியாளர், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் ஆனது 1972 ஆம் ஆண்டு மத்திய ஆட்சிப்பணி (ஓய்வூதியம்) விதிகள் திருத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் ஓய்வு பெற்ற எந்தவொரு அதிகாரியும் அவர்களின் அனுபவங்கள் பற்றியும் அந்த நிறுவனங்களில் அவர்கள் பெற்ற நிபுணத்துவம் உள்ளிட்ட தகவல்களையும் அந்த நிறுவனத்தின் தலைவருடைய அனுமதியின்றி வெளியிடக் கூடாது என புதிதாக திருத்தப்பட்ட ஆட்சிப் பணி ஓய்வூதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகளை கடைப்பிடிக்கத் தவறினால் அவர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம் அல்லது முழுவதும் திரும்பப் பெறப்படலாம்.