மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகமானது குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கும் குறைந்தபட்ச ஊதியத்திற்கான தேசிய அளவிலான ஒரு வரம்பினை நிர்ணயிப்பதற்கும் வேண்டி ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
மூன்று ஆண்டு காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இக்குழுவிற்குப் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் அஜித் மிஷ்ரா அவர்கள் தலைமை தாங்குவார்.
இந்த முடிவானது மத்திய அரசின் 2019 ஆம் ஆண்டு ஊதிய விதிகளை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகும்.
2019 ஆம் ஆண்டு ஊதிய விதிகளானது சட்டரீதியிலான தேசிய ஊதிய வரம்பினை கட்டாயமாக்குகிறது.