பிரதமர் மோடி அவர்கள் E-100 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் எத்தனால் உற்பத்தி மற்றும் வழங்கீடு போன்றவற்றிற்கான ஒரு பிணையத்தை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் எத்தனால் கலவை திட்டத்திற்கான செயல்திட்டம் மீதான நிபுணர் குழுவின் அறிக்கையினையும் (2020-2025) பிரதமர் வெளியிட்டார்.
இது உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துருவான “சிறப்பான சுற்றுச்சூழலுக்காக வேண்டி உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்” என்பதற்கு இணங்க வெளியிடப் பட்டுள்ளது.
குறிப்பு
மேலும் பூனாவின் மூன்று இடங்களில் எத்தனால் வழங்கீட்டு மையங்களை அமைப்பதற்காக E-100 எனும் முதன்மைத் திட்டத்தினையும் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
2025 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதற்கான ஒரு இலக்கினை அரசு மாற்றியமைத்துள்ளது.
இதற்கு முன்பாக இந்த இலக்கை அடைவதற்கான கால நிர்ணயமானது 2030 ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.