COP30 புதைபடிவ எரிபொருள் மாற்றத்திற்கான வழிகாட்டுதல் 2026
November 9 , 2026 5 days 88 0
பிரேசிலின் 30 வது பருவநிலை மாற்ற மாநாட்டுத் (COP30) தலைமையகம் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாறுவதற்கான வழிகாட்டுதலை வெளியிட்டது, அதே வேளையில் COP31 உலகளாவிய மின்மயமாக்கல் உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.
புதைபடிவ எரிபொருள்களிலிருந்து மாறுவதற்கான வழிகாட்டுதல் (TAFF) ஆனது புதைபடிவ எரிபொருள் நுகர்வைக் குறைத்தல், தூய்மையான ஆற்றலை விரிவுபடுத்துதல் மற்றும் புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருக்கும் பொருளாதாரங்களை மாற்றுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
2035 ஆம் ஆண்டளவில் உலகளாவிய இறுதி ஆற்றல் நுகர்வில் மின்சாரத்தின் பங்கை 35% ஆக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட துருக்கியின் வரவிருக்கும் COP31 தலைமையால் தொடங்கப்பட்ட 35-by-35 எனும் உலகளாவிய மின்மயமாக்கல் உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் முறைமைக்கு (CBAM) தனது எதிர்ப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
வளரும் நாடுகளுக்கு ஆதரவளிக்க சர்வதேச பருவநிலைக்கு நிதியளிப்பதை அதிகரிக்க வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது; பாகு-டு-பெலெம் வழி காட்டுதல் 2035 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு குறைந்தது 1.3 டிரில்லியன் டாலர்களைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
COP30 வழிகாட்டுதல் தன்னார்வ அடிப்படையிலானது மற்றும் புதிய தேசிய இலக்குகள் அல்லது பிணைக்கப்பட்ட கடமைகளை நிறுவவில்லை.