COVID-19 பாதிப்பிற்கான அவசரகால நிதியை இந்தியா முன்மொழிவு
March 17 , 2020
1871 days
589
- கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துச் சமாளிப்பதற்கு ஒரு உத்தியை வகுப்பதற்காக சார்க் அமைப்பின் தலைவர்கள் காணொளி மாநாடு ஒன்றில் பங்கேற்றனர்.
- இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- இந்த மாநாட்டில் கோவிட் -19 பாதிப்பிற்கான அவசரகால நிதியை உருவாக்க இந்தியா முன்மொழிந்துள்ளது.
- மேலும் இந்த வைரஸ் நோய்க் கடத்திகளைச் சிறப்பான முறையில் கண்காணிப்பதற்காக இந்தியா நோய் கண்காணிப்பு இணைய வாயிலை அமைக்க உள்ளது.
- “நோயை எதிர்த்துப் போராட தயாராகு, அச்சம் அடையத் தேவையில்லை” என்ற உத்தியுடன் இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராடுகின்றது.
Post Views:
589