குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ள DefExpo 2022 எனப்படும் பாதுகாப்புத் துறை கண்காட்சியினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் முதல் பாதுகாப்புக் கண்காட்சி இது என்பதோடு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கருவிகளை மட்டுமே காட்சிக்கு வைத்து உள்ளது.
இந்தக் கண்காட்சியில் ஆப்பிரிக்கா மற்றும் 53 நட்பு நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தக் கண்காட்சியை ஒட்டி 2வது இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.
உலகின் 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.