TNPSC Thervupettagam

DGMS அமைப்பின் 125ஆம் ஆண்டு ஸ்தாபன தினம்

January 12 , 2026 9 hrs 0 min 27 0
  • சுரங்கப் பாதுகாப்பு தலைமை இயக்குநரகமானது (DGMS) ஜனவரி 7 அன்று தனது 125வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
  • 1902 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இது நிலக்கரி, உலோகத் தாது மற்றும் எண்ணெய் சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனுக்கான சட்டப்பூர்வ அதிகாரம் ஆகும்.
  • DGMS அமைப்பின் தலைமையகம் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்தில் அமைந்துள்ளது.
  • இது, 1952 ஆம் ஆண்டு சுரங்கச் சட்டம் மற்றும் பிற சுரங்கப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துகிறது.
  • சுரங்கங்களில் பாதுகாப்பான மற்றும் ஆபத்து இல்லாத பணிச்சூழலை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்