சமீபத்தில் உலக வங்கியானது இந்தியாவில் தற்பொழுதுள்ள அணைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் வேண்டி 250 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
DRIP (Dam Rehabilitation and Improvement Project) என்பது அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்பதைக் குறிக்கின்றது.
இது உலக வங்கியிடமிருந்துப் பெறப்படும் கடன் உதவியுடன் செயல்படுத்தப் படுகின்றது.
இந்தத் திட்டமானது ஆரம்பத்தில் கர்நாடகா, ஜார்க்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்களில் தொடங்கப் பட்டது.