இந்தியாவின் முதலாவது கடல்சார் பகுதி கட்டுப்பாட்டகமானது (Maritime Theatre Command - MTC) 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
இது இந்திய விமானப் படை, இந்தியக் கடற்படை, இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடலோரக் காவல் படையின் சொத்துகளை ஒருங்கிணைக்க உள்ளது.
இது மேற்குக் கடற்படைக் கட்டுப்பாட்டகம் (மும்பை), அந்தமான் நிக்கோபார் முச்சேவை கட்டுப்பாட்டகம் (போர்ட் பிளேயர்), கிழக்குக் கடற்படைக் கட்டுப்பாட்டகம் (விசாகப்பட்டினம்) மற்றும் தெற்கு வான்படை கட்டுப்பாட்டகம் (திருவனந்தபுரம்) ஆகியவற்றை ஒன்றிணைக்க உள்ளது.
மிகப்பெரிய இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் முதலாவது புவியியல்சார் பகுதி கட்டுப்பாட்டகம் இதுவாகும்.