அலையன்ஸ் ஏர் நிறுவனமானது, 'Fare se Fursat' என்ற நிலையான விமானக் கட்டணத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பதிவு தேதியைப் பொருட்படுத்தாமல் மாறாமல் இருக்கும் நிலையான ஒற்றைக் கட்டணத்தை இந்த திட்டம் வழங்குகிறது.
மலிவு விலையிலான பிராந்திய விமானப் பயணத்தை ஊக்குவிப்பதற்காக இது உடான் (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) திட்டத்துடன் ஒருங்கிணைகிறது.
இந்தத் திட்டமானது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
ஏற்ற இறக்கமான விமானக் கட்டணங்களினால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதையும் கடைசி நிமிடப் பயணத்தை ஊக்குவிப்பதையும் இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
'நயே பாரத் கி உடான்' என்ற முழக்கத்தின் கீழ் நிலையான கட்டண மாதிரி "ஒரு பாதை, ஒரு கட்டணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.