TNPSC Thervupettagam

Food Waste Breakthrough முன்னெடுப்பு

November 20 , 2025 7 days 83 0
  • Food Waste Breakthrough - உணவுக் கழிவுகளுக்கான திருப்புமுனை மிக்க முன்னெடுப்பானது பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 மாநாட்டில் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்டது.
  • இது 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய உணவுக் கழிவுகளை பாதியாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பு மீத்தேன் உமிழ்வில் 7 சதவீதம் வரை குறைப்பை இலக்காகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நான்கு ஆண்டு திட்டத்துடன் இதை ஆதரிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பு ஆனது COP28 மாநாட்டின் எமிரேட்ஸ் பிரகடனம் மற்றும் COP29 மாநாட்டின் மீத்தேன்-கழிவு உறுதிமொழிகள் உள்ளிட்ட முந்தைய COP அறிவிப்புகளுடன் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்