2030 ஆம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் (AIDS) நோயைப் பொது சுகாதார அச்சுறுத்தல் என்ற நிலையிலிருந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 2026 ஆம் ஆண்டு அரசியல் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) ஏற்றுக்கொண்டது.
இது 2030-ஆம் ஆண்டிற்கான 95-95-95 இலக்குகளை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன் இதன்படி, எச்.ஐ.வி (HIV) பாதித்தவர்களில் 95% பேர் தங்கள் பாதிப்பு நிலையை அறிந்திருக்க வேண்டும், 95% பேர் சிகிச்சை பெற வேண்டும், மற்றும் 95% பேர் வைரஸ் ஒடுக்கத்தை அடைந்திருக்க வேண்டும்.
4 கோடி பேருக்கு எச்.ஐ.வி சிகிச்சையளிக்கவும், ரெட்ரோ வைரஸ் எதிர்ப்புப் பொருள் (ARV) அடிப்படையிலான தடுப்பு முறைகளை 2 கோடி பேருக்கு விரிவுபடுத்தவும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 21.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டவும் இது இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாலின சமத்துவம், எச்.ஐ.வி தொடர்பான களங்கம் மற்றும் பாகுபாடுகளை ஒழித்தல், வலுவான சமூகம்-சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் மலிவான எச்.ஐ.வி மருந்துகள் மற்றும் நோயறிதல்களுக்கான பரந்த அணுகல் ஆகியவற்றை இப்பிரகடனம் ஊக்குவிக்கிறது.
உலகளாவிய முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக UNAIDS-க்கு வருடாந்திர முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும், 2031-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) உயர்மட்டக் கூட்டத்தை நடத்தவும் இது அழைப்பு விடுக்கிறது.