சவூதி அரேபியா சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணியின் (IBCA) 26-வது உறுப்பு நாடாக மாறியுள்ளது.
IBCA என்பது சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிவிங்கிப்புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகிய ஏழு பெரும் பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய தளமாகும்.
பெரும் பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான பல நாடுகள் மற்றும் பல அமைப்புகளின் கூட்டமைப்பாக 2024-ஆம் ஆண்டில் இக்கூட்டணி நிறுவப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்பை ஆதரிக்கும் 95 பெரும் பூனை இனங்கள் வாழும் நாடுகள், அவை வாழாத நாடுகள், அறிவியல் அமைப்புகள் மற்றும் நிறுவனப் பங்கீட்டாளர்கள் இக்கூட்டணியில் அடங்குவர்.
பெரும் பூனை இனங்களுக்கான சர்வதேச ஒத்துழைப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வெற்றிகரமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பகிர்வதை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.