TNPSC Thervupettagam

IMD பருவநிலை ஆய்வு

November 13 , 2026 17 hrs 0 min 59 0
  • இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) நடத்திய ஆய்வில், கடந்த ஏழு தசாப்தங்களில் தென்னிந்தியா அதிக ஈரப்பதமுடையதாக மாறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  • தீபகற்ப இந்தியாவில் உள்ள வெப்பமான அரை வறண்ட பருவநிலை மண்டலம் 30% (1951-1980) என்பதிலிருந்து கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து 16% (1991-2020) ஆக மாறியுள்ளது.
  • 1950-களில் சுமார் ஐந்தில் மூன்று பங்காக இருந்த வெப்பமண்டல சவான்னா பருவநிலை மண்டலம், தற்போது தீபகற்ப இந்தியாவின் நான்கில் மூன்று பங்கை ஆக்கிரமித்துள்ளது.
  • இதற்கு மாறாக, மழையளவு குறைந்து வருவதால் வெப்பமான அரை வறண்ட மண்டலம் கிழக்கு உத்திரப் பிரதேசம் வரை விரிவடைந்து, வடமேற்கு இந்தியாவை மேலும் வறண்டதாகவும் வெப்பமாகவும் மாற்றியுள்ளது.
  • இந்த ஆய்வு கோப்பன்-கைகர் (Köppen-Geiger) பருவநிலை வகைப்பாடு அமைப்பு மற்றும் 1951 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை பதிவுகளைப் பயன்படுத்தியது.
  • இந்த பருவநிலை மாற்றங்கள் பயிர் தேர்வு மற்றும் விதைப்புக் காலங்களை பாதிக்கலாம், இதனால் நீண்டகால விவசாய மற்றும் நீர் திட்டமிடல் அவசியமாகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்