TNPSC Thervupettagam

IRCC வழங்குதல் - இந்தியா

May 29 , 2026 14 hrs 0 min 46 0
  • நகோயா நெறிமுறையின் கீழ் 'சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இணக்கச் சான்றிதழ்களை' (IRCCs) வழங்குவதில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது.
  • ABS (அணுகல் மற்றும் பலன் பகிர்தல்) தீர்வகத்தில் பதிவுசெய்யப்பட்ட உலகளாவிய மொத்த 6,311 சான்றிதழ்களில், இந்தியா சுமார் 3,556 IRCC-களை வழங்கியுள்ளது.
  • நகோயா நெறிமுறையானது பல்லுயிர்ப் பரவல் குறித்த மாநாட்டுடன் தொடர்பு உடையது மற்றும் மரபணு வளங்களிலிருந்து கிடைக்கும் பலன்களை நியாயமாகப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது.
  • மரபணு வளங்களைப் பயன்படுத்துவதற்கு 'முன்னதாக அறியப்படுத்தப்பட்ட ஒப்புதல்' மற்றும் 'பரஸ்பரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள்' பின்பற்றப் பட்டதை IRCC-கள் உறுதிப்படுத்துகின்றன.
  • இந்தியாவின் பல்லுயிர் கட்டமைப்பில் பல்லுயிர் சட்டம் 2002, தேசியப் பல்லுயிர் ஆணையம், மாநிலப் பல்லுயிர் வாரியங்கள் மற்றும் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் ஆகியவை அடங்கும்.
  • 2017 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கு இடையில், ABS ஒப்புதல்கள் மூலம் இந்தியா சுமார் ₹263 கோடியை ஈட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்