TNPSC Thervupettagam

NCERT பாடத் திட்டம் – மறு ஆய்வு

May 19 , 2019 2193 days 778 0
  • தேசியக் கல்வி கட்டமைப்பு – 2005ஐ (NCF - National Curriculum Framework) மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டிருப்பதாக தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆணையத்தின் (NCERT - National Council of Educational Research and Training) இயக்குநர் அறிவித்துள்ளார்.
  • NCF ஆனது பள்ளிப் பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கும் பாடப் புத்தகங்களை எழுதுவதற்குமான ஒரு கட்டமைப்பை அளிக்கின்றது.
  • மேலும் இது இந்தியாவில் கற்பித்தல் நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குகின்றது.
  • 1975, 1988, 2000 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் நான்கு தேசியக் கல்விக் கட்டமைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • பள்ளிப் பாடத் திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கான பணிக் குழு விரைவில் ஏற்படுத்தப்பட விருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்