TNPSC Thervupettagam

NFHS 5 கண்டுபிடிப்புகள்

January 13 , 2021 1618 days 2610 0
  • தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு 5 (NFHS - National Family Health Survey 5) மீதான  தவறான கண்டுபிடிப்புகளை ஆராய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • இது மக்கள் தொகை, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியம், குடும்ப நலன், ஊட்டச்சத்து பற்றிய முக்கிய குறிகாட்டிகளின் உண்மைத் தரவுகளை வெளியிட்டு உள்ளது.
  • NFHS 5 ஆய்வின் முதல் கட்ட ஆய்வானது 2019-20 காலகட்டத்தில் 22 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கி இருக்கின்றது.
  • NFHS ஆய்வின் நான்கு சுற்று ஆய்வுகள் (1992–93, 1998–99, 2005–06 மற்றும் 2015–16) இந்தியாவில் வெற்றிகரமாக முடிக்கப் பட்டுள்ளன.
  • NFHS ஆய்வின் அனைத்துச் சுற்றுகளும் மும்பையில் உள்ள சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்தால் நடத்தப் படுகிறது.

முக்கியக் கண்டுபிடிப்புகள்

  • மாற்று நிலை கருவுறுதலின் விகிதமான 2.1 ஆனது கணக்கெடுக்கப்பட்ட 22 மாநிலங்களில் 19 மாநிலங்கள்/ ஒன்றியப் பிரதேசங்களில் அடையப் பட்டுள்ளது.
  • மணிப்பூர் (2.2), மேகாலயா (2.9) மற்றும் பீகார் (3.0) ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே மொத்த கருவுறுதல் விகிதமானது தற்போதைய மாற்று நிலை விகிதங்களை (replacement levels) விட அதிகமாக உள்ளது.
  • ஒட்டு மொத்தக் கருத்தடை பரவல் விகிதமானது இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் (74%) அதிகமாக உள்ளது.
  • நாகாலாந்து, மேகாலயா மற்றும் அசாம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசத்தில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் முழுமையாக நோய்த் தடுப்பாற்றல் கொண்டிருக்கிறார்கள்.
  • சிக்கிம், அசாம், கோவா மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை பிறந்த குழந்தை இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்டோர் இறப்பு விகிதம் ஆகியவற்றில் சரிவைக் கண்டுள்ளன.
  • மேகாலயா, மணிப்பூர் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் பிறந்த குழந்தை இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்டோர் இறப்பு விகிதம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் குழந்தை இறப்புகள் அதிகரித்துள்ளன.
  • கணக்கெடுக்கப்பட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில், பீகார் மாநிலம் மூன்று பிரிவுகளிலும்  ஒரு வயதுக்குட்பட்ட மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதத்தில் மிக அதிகமாக இருப்பதைக் காட்டியுள்ளது, அதே நேரத்தில் மிகக் குறைந்த இறப்பு விகிதம் கேரளாவில் பதிவாகியுள்ளது.
  • பெரும்பாலான இந்திய மாநிலங்களில்  ஒரு வயதுக்குட்பட்ட மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்புகளானது குறைந்துள்ளது.
  • பெரும்பான்மையான மாநிலங்கள் 952 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் சாதாரண பாலின விகிதத்தைக் கொண்டு  உள்ளன.
  • இது தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம், கோவா, தாத்ரா நகர் ஹவேலி & டையு டாமன் ஆகிய இடங்களில் 900 என்ற எண்ணிக்கைக்குக் கீழே உள்ளது.
  • 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் பிறந்த குழந்தைகள் முந்தைய தலைமுறையை விட அதிகமாக ஊட்டச்சத்து குறைபாட்டைக் கொண்டுள்ளனர்.
  • தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு 3 (2005-06) மற்றும் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு 4 (2015-16) ஆகியவற்றுக்கு இடையில் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இந்தியா முன்னேற்றம் கண்டாலும், நாடு இப்போது குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அடிப்படையில் மீண்டும் மோசமான நிலைக்குத் திரும்பியுள்ளது.
  • அதிக அல்லது மிக உயர்ந்த இரத்தச் சர்க்கரை உள்ள ஆண்களின் சதவீதம் அதிக அளவில் கேரளாவிலும் (27%), அதைத் தொடர்ந்து கோவாவிலும் (24%) உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்