TNPSC Thervupettagam

NHRC - 'B' அந்தஸ்து

May 3 , 2025 43 days 98 0
  • தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டணியின் (GANHRI) ஒரு அங்கீகாரத்திற்கான துணைக் குழு (SCA) ஆனது இந்தியத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தினை (NHRC) B அந்தஸ்துக்கு தரமிறக்கப் பரிந்துரைத்துள்ளது.
  • இந்திய NHRC ஆனது தற்போது அதன் B அந்தஸ்தினை வங்க தேசம், லிபியா, பஹ்ரைன் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும்.
  • எளிமையான கூறினால், இந்தப் பரிந்துரை இறுதியானால், இந்தியாவின் NHRC ஆனது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் பேசவோ அல்லது அதிகாரப் பூர்வமாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது.
  • 2016 ஆம் ஆண்டில், இந்திய NHRC அமைப்பின் A-தர அங்கீகாரத்தினை GANHRI குழுவின் அங்கீகாரத்திற்கான துணைக் குழு (‘SCA’) முதல் முறையாக ஒத்திவைத்தது.
  • 2023 ஆம் ஆண்டில், SCA ஆனது இரண்டாவது முறையாக இந்திய NHRC அமைப்பின் அங்கீகாரத்தினை ஒத்தி வைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்