May 5 , 2021
1535 days
626
- P–81 ரக ரோந்து விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
- இது அதிஉயர் வரம்புடைய ஒரு ரோந்து விமானமாகும்.
- இந்த விமானமானது இந்தியக் கடற்படைக்காக போயிங் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதாகும்.
- இந்த விமானமானது P–8A போசிடனின் (Poseidon) வகையாகும்.
- போசிடன் ரோந்து விமானமானது அமெரிக்கக் கடற்படையினால் இயக்கப்படும் விமானமாகும்.
- P - 81 ரக விமானமானது கடல்சார் ரோந்து பணிகள், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்கள், உளவுப் பணிகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் உடையதாகும்.

Post Views:
626