“PanBio COVID-19” எனப் பெயரிடப்பட்ட வீட்டிலேயே பயன்படுத்தக் கூடிய வகையிலான இரண்டாவது விரைவு ஆன்டிஜன் சோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த சோதனைக் கருவியானது சிகாகோவிலுள்ள அபோட் ரேபிட் டயக்னஸ்டிக்ஸ் டிவிசன் (Abbott Rapid Diagnostics Division) எனும் அமைப்பினால் உருவாக்கப்பட்டதாகும்.
இதற்கு முன்பு, கோவிசெல்ப் எனும் சோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது ஒப்புதல் வழங்கி இருந்தது.
அது பூனாவில் அமைந்துள்ள மைலேப் டிஸ்கவரி சல்யூசன்ஸ் எனும் ஒரு நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.