2020-21 ஆம் ஆண்டில் PM CARES நிதியின் கீழ் உள்ள மொத்த தொகை 10,990.17 கோடி ரூபாய் ஆகும்.
இது 2020-21 ஆம் நிதியாண்டில்மும்மடங்காக உயர்ந்தது.
2020-21 ஆம் ஆண்டில் இந்த நிதியிலிருந்து ரூ.3,976.17 கோடி செலவிடப்பட்டுள்ளது என PM CARES நிதி பற்றிய சமீபத்திய தணிக்கை அறிக்கை கூறுகிறது.
2021 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்றைய நிலவரப்படி, இந்த நிதியில் ரூ. 7,013.99 கோடி செலவழிக்கப் படாமல் உள்ளது.
COVID-19 தொற்றுக்கு எதிரான ஒரு போராட்டத்தினை வலுப்படுத்த செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும், புலம் பெயர்ந்தோருக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் இந்த நிதியின் ஒரு பகுதியைப் பயன்படுத்தியது.