TNPSC Thervupettagam

பர்வத்மாலா

February 11 , 2022 1534 days 896 0
  • “பர்வத்மாலா” என்ற தேசியக் கம்பிவடப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டமானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
  • மலைப்பாங்கான பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக 2022 /23 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சரால் இத்திட்டமானது அறிவிக்கப்பட்டது.
  • கடினமான மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள வழக்கமான சாலைகளுக்குப் பதிலாக, இந்தப் போக்குவரத்து வசதியானது ஒரு  சுற்றுச்சூழல் ரீதியான நிலையான மாற்றாக இருக்கும்.
  • சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • வழக்கமான வெகுஜனப் போக்குவரத்து அமைப்புகள் கூட சாத்தியமில்லாத நெரிசலான நகர்ப்புறங்களிலும் இது செயல்படுத்தப்படும்.
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இதன் உருவாக்கப் பணிகளுக்குப்  பொறுப்பு வகிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்