மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டு பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனாவை (PMGKAY) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் (NFSA) இணைக்க முடிவு செய்துள்ளது.
நாடு தழுவிய முழு ஊரடங்கு மூலம் வாழ்வாதாரம் முடங்கிய ஏழைகளுக்கு உதவிட PMGKAY திட்டம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்கப் படுகிறது.
NFSA சட்டத்தின் கீழ், ஒவ்வொரு அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பமும், மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு.
மற்ற அனைத்து வகை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும்.