TNPSC Thervupettagam

QS ஆசியத் தரவரிசைகள் 2019

October 28 , 2018 2459 days 748 0
  • குவாக்கரேலி சைமண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் QS ஆசியப் பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசை 2019 என்ற அறிக்கையின் படி, தரவரிசைப் பட்டியலில் இந்தியா தனது இருப்பை இரு மடங்காக முன்னேற்றியுள்ளது.
  • ஆசியாவின் சிறந்த பல்கலைக் கழகமாக சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகம் மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
  • இதனைத் தொடர்ந்து, ஹாங்காங் பல்கலைக்கழகம், சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். சீனாவின் சிங்குவா மற்றும் பீகிங் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன.
  • சீனா (112) மற்றும் ஜப்பான் (89) ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா அதிக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களைக் கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.
  • ஒட்டுமொத்தப் பட்டியலில் 500 என்ற எண்ணிக்கையில் புதிதாக 40 இந்திய நிறுவனங்கள் உள்பட மொத்தம் 75 இந்திய நிறுவனங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவும் முதல் 20 இடங்களில் வரவில்லை.
  • பம்பாய் ஐஐடி அதிகபட்சமாக மதிப்பிடப்பட்ட நிறுவனமாகும். இது ஒரு இடம் முன்னேறி 33வது இடத்தை அடைந்து இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்