குவாக்கரேலி சைமண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் QS ஆசியப் பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசை 2019 என்ற அறிக்கையின் படி, தரவரிசைப் பட்டியலில் இந்தியா தனது இருப்பை இரு மடங்காக முன்னேற்றியுள்ளது.
ஆசியாவின் சிறந்த பல்கலைக் கழகமாக சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகம் மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, ஹாங்காங் பல்கலைக்கழகம், சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். சீனாவின் சிங்குவா மற்றும் பீகிங் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன.
சீனா (112) மற்றும் ஜப்பான் (89) ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா அதிக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களைக் கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.
ஒட்டுமொத்தப் பட்டியலில் 500 என்ற எண்ணிக்கையில் புதிதாக 40 இந்திய நிறுவனங்கள் உள்பட மொத்தம் 75 இந்திய நிறுவனங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவும் முதல் 20 இடங்களில் வரவில்லை.
பம்பாய் ஐஐடி அதிகபட்சமாக மதிப்பிடப்பட்ட நிறுவனமாகும். இது ஒரு இடம் முன்னேறி 33வது இடத்தை அடைந்து இருக்கின்றது.