சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation - DRDO) மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) ஆகியவை இணைந்து RaIDer-X என்ற பெயர் கொண்ட புதிய வெடிபொருட்களைக் கண்டறியும் சாதனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
RaIDer-X ஆனது சமீபத்தில் மார்ச் 01 அன்று நடத்தப்பட்ட 2020 ஆம் ஆண்டின் வெடிபொருட்களைக் கண்டறிவதற்கான தேசியப் பயிலரங்கத்தின் (NWED - National Workshop on Explosive Detection) போது காட்சிப் படுத்தப் பட்டது.
இது ஒரு குறிப்பிட்ட வரம்பிலிருந்து வெடிபொருட்களைக் கண்டறிந்து செயல்பாட்டாளருக்கு அறிவிக்கும் திறன் கொண்டது.
DRDO
DRDO ஆனது இந்திய அரசின் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவாகும்.
இது அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் தன்னிறைவு அடைவதற்காக இந்திய ஆயுதப் படைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கின்றது.