இந்தியாவின் வேலையின்மை விகிதமானது பிப்ரவரியில் 7.78% ஆக உயர்ந்தது. 2019 ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு மிக அதிகமான விகிதம் இதுவாகும்.
இந்தத் தரவானது இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தினால் (Centre for Monitoring Indian Economy - CMIE) வெளியிடப் பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் எழும் விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளால் பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் இந்த விகிதம் மேலும் உயரக்கூடும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.