விமானப் பயணத்தின் போது அருகலை வசதி (வைஃபை)
March 3 , 2020
1983 days
683
- விமானப் பயணத்தின் போது அருகலை (வைஃபை) சேவைகளை விரைவில் அறிமுகப் படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- விமானத்தில் உள்ள விமானிகளின் அனுமதி பெற்ற பிறகு விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட இருக்கின்றது.
- விமானத்தில் உள்ள பயணிகள் விமானப் பயன்முறையில் இருக்கும் சாதனங்களுக்கு அந்த விமானத்தில் அருகலை (வைஃபை) சேவைகளைப் பெறலாம்.
- விமானம் புறப்பட்டு விமானத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டவுடன் மட்டுமே இந்த சேவையைப் பயணிகள் பெற முடியும்.
- விமானப் பயணத்தின் போது இணையச் சேவையின் பயன்பாட்டிற்காக பொது இயக்குனரால் இதற்குச் சான்றளிக்கப்பட வேண்டும்.
Post Views:
683