இந்தியா மற்றும் அர்மேனியா ஆகிய நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம்
March 4 , 2020 1985 days 632 0
ஐரோப்பாவில் உள்ள அர்மேனியாவிற்கு ஆயுதங்களைக் கண்டறியும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு ரேடார்களை வழங்க வழிசெய்யும் 40 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டு உள்ளது. ரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா அந்நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது பாதுகாப்புத் துறையில் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்திற்கு ஒரு பெரிய சாதனையாகக் கருதப் படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா “சுவாதி” என்ற ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் நான்கு ரேடார்களை அர்மேனியாவிற்கு வழங்க இருக்கின்றது.
இது 50 கி.மீ தூரத்தில் உள்ள சிறு பீரங்கிகள், குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் (ஏவுகணை) போன்ற எதிரி நாட்டு ஆயுதங்களின் வேகம், தானியங்கும் தன்மை மற்றும் துல்லியமான இருப்பிடம் ஆகியவை குறித்த தகவல்களை வழங்க இருக்கின்றது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மின்னணு மற்றும் ரேடார் வளர்ச்சி அமைப்பினால் (Electronics and Radar Development Establishment - LRDE) சுவாதி என்ற ரேடார் ஆனது உருவாக்கப் பட்டது.