TNPSC Thervupettagam

RBI வெளியிட்ட உயர் அடுக்கு NBFCகளின் இரண்டாவது பட்டியல்

August 19 , 2026 6 days 98 0
  • 2026-27 ஆம் ஆண்டிற்கான 17 பெரிய (உயர் அடுக்கு அல்லது UL) வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் டாடா சன்ஸ் நிறுவனம் இடம்பெற்றுள்ளது; அவற்றைக் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மேம்பட்ட ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்படுத்துதல் மற்றும் அடையாளம் காணப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் கட்டாயப் பட்டியலிடுதல் ஆகியன இதில் அடங்கும்.
  • இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற நிறுவனங்கள் REC லிமிடெட், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா கேபிடல், LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம், மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீசஸ், L&T ஃபைனான்ஸ், பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், HDB ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் பிரமல் ஃபைனான்ஸ் ஆகியனவாகும்.
  • மத்திய வங்கியின் கட்டமைப்பானது NBFC-களை அடிப்படை அடுக்கு (NBFC-BL), நடுத்தர அடுக்கு (NBFC-ML), உயர் அடுக்கு (NBFC-UL) மற்றும் உச்சி அடுக்கு (NBFC-TL) என வகைப்படுத்துகிறது, மேலும் உயர் அடுக்கில் உள்ள NBFC-களை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்களை வழங்குகிறது.
  • அளவுகோல் அடிப்படையிலான ஒழுங்குமுறை தொடர்பான RBI-யின் கட்டமைப்பின்படி, வணிக வங்கிகளைப் போன்று கடுமையான மேம்பட்ட ஒழுங்குமுறை தேவை என்று ஆண்டுதோறும் அதன் மூலம் குறிப்பாக அடையாளம் காணப்படும் NBFC-கள் மேல் அடுக்கில் (UL) அடங்கும்.
  • நிதியாண்டிற்கான சமீபத்திய தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பின்படி ₹1,00,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து அளவைக் கொண்ட NBFC-களை மேல் அடுக்கு கொண்டுள்ளது.
  • கட்டமைப்பின் அடிப்படையில், ஒரு NBFC ஆனது NBFC-UL என வகைப்படுத்தப்பட்டவுடன், அது அடுத்தடுத்த ஆண்டுகளில் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், அடுக்கில் வகைப்படுத்தப்பட்டதிலிருந்து குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேம்பட்ட ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்படுத்தப்படும்.
  • வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்பவை 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களாகும்.
  • NBFC என்பது கடன்கள் மற்றும் முதலீடுகள் போன்ற வங்கிச் சேவைகளை வழங்கும் ஒரு நிதி நிறுவனமாகும்.
  • இது முழுமையான வங்கி உரிமத்தைக் கொண்டிருக்கவில்லை.
  • மேலும் அவை வங்கிகளைப் போன்று கேட்பு வைப்புகளை ஏற்கவோ அல்லது சுய-வரைவுக் காசோலைகளை வழங்கவோ முடியாது.
  • வங்கி வைப்புகளைப் போன்று NBFC-களிடம் உள்ள வைப்புகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவுடன் காப்பீடு செய்யப்படுவதில்லை.
  • அவை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்