TNPSC Thervupettagam

RBIன் புதிய NBFC பட்டியல்

August 9 , 2026 5 days 66 0
  • 2026-27 ஆம் ஆண்டிற்கான மேல் அடுக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டது.
  • முந்தையப் பட்டியலில் 15 ஆக இருந்த நிலையில், தற்போதைய பட்டியலில் 17 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) உள்ளன.
  • மேல் அடுக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களை அடையாளம் காண ₹1 லட்சம் கோடி அல்லது அதற்கும் மேற்பட்ட சொத்து மதிப்பு என்ற வரம்பை 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் RBI அறிமுகப்படுத்தியது.
  • REC லிமிடெட், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் ஆகியவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் சம்மான் கேபிடல் ஆகியவை திருத்தப்பட்ட சொத்து அளவுகோலின் அடிப்படையில் விலக்கப்பட்டுள்ளன, ஆனால் ஐந்தாண்டு கால முடக்கக் காலம் காரணமாக மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறையின் கீழ் அவை தொடர்கின்றன.
  • டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கோர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி (CIC) பதிவை ஒப்படைப்பதற்கான விண்ணப்பம் தொடர்பாக தொடர்ந்து பரிசீலிக்கப் பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்