TNPSC Thervupettagam

மின்னணு -வணிக ஏற்றுமதி கட்டமைப்பு

August 9 , 2026 5 days 57 0
  • 2023 ஆம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் (FTP) கீழ் சரக்கு இருப்பு அடிப்படையிலான எல்லை தாண்டிய மின்னணு-வணிக ஏற்றுமதி கட்டமைப்பை அரசாங்கம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.
  • உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்களைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே மின்னணு -வணிக நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள இந்தக் கட்டமைப்பு அனுமதிக்கிறது.
  • உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஆர்டர்களுக்கு எதிராக 'பதிவில் உள்ள விற்பனையாளர்களிடமிருந்து' (Sellers-on-Record) பொருட்களைக் கொள்முதல் செய்யும் 'பதிவில் உள்ள ஏற்றுமதியாளர்' (Exporter-on-Record) மூலம் ஏற்றுமதிகள் கையாளப்பட வேண்டும்.
  • சுங்கம், ஆவணங்கள், சோதனை, பேக்கேஜிங்/உறையிடுதல், அடையாளமிடல், தளவாடங்கள் மற்றும் இலக்கு-நாட்டின் தேவைகளுடனான இணக்கம் ஆகியவற்றை பதிவில் உள்ள ஏற்றுமதியாளர் (EOR) கையாள்கிறார்.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் உலகளாவிய மின்னணு-வணிக சந்தைகளை அணுகுவதற்கு உதவும் அதே வேளையில், ஊகத்தின் அடிப்படையிலான இருப்பு மற்றும் உள்நாட்டுச் சந்தைக்கு திருப்பி விடப்படுவதை இந்த கட்டமைப்பு தடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்