SAMVEDNA என்பது உணர்ச்சி மேம்பாடு மற்றும் அவசியமான ஏற்பு மூலம் மனநலப் பாதிப்பு குறித்த உணர்திறன் நடவடிக்கைகளை மேற்கொள்தல் (Sensitizing Action on Mental Health Vulnerability through Emotional Development Necessary Acceptance) என்பதாகும்.
இது கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஒரு கட்டணமில்லாத உதவி எண்ணின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சேவையாகும்.
குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த முதலுதவியையும் உணர்வுப் பூர்வமான ஒரு ஆதரவையும் வழங்குவதே சம்வேத்னாவின் (SAMVEDNA) முக்கிய நோக்கமாகும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குத் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.
கோவிட்-19 தொற்றினால் தன் பெற்றோரை இழந்த குழந்தைகள்.
கோவிட் நல மையங்களில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் குழந்தைகள்.
கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் (அ) உறவினர்களுடன் வாழும் குழந்தைகள்.