பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப் படையானது பொக்ரான் ரகத்தைச் சேர்ந்த, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்ட ஒரு நெடுந்தூர பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
SANT வகை ஏவுகணைகளானது 10 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளையும் எதிர்க்க வல்லது.
ஆயுதப் படைகளுக்கான SANT ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இதர ஆய்வகங்கள் மற்றும் இதரத் தொழில்துறைகளுடன் இணைந்து ஹைதராபாத்திலுள்ள இமாரத் ஆராய்ச்சி மையத்தினால் வடிவமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டது.