TNPSC Thervupettagam

SDG இந்தியா குறியீடு - 2019

January 2 , 2020 1997 days 1111 0
  • நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (Sustainable Development Goals – SDG) இந்தியா குறியீடானது 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் நிதி ஆயோக் அமைப்பால் வெளியிடப் பட்டது.
  • இந்தக் குறியீடானது ஐக்கிய நாடுகள் சபையால் SDGகளாக குறிப்பிடப்பட்ட 17 இலக்குகளில் 16 இலக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டது.
  • இது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அளவுருக்கள் மீதான மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்கின்றது.
  • இது வறுமை, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற SDGகளை மேலும் மேம்படுத்த மாநிலங்களிடையே ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்குகின்றது.
  • இந்த ஆண்டறிக்கையின் படி, நீர் மற்றும் சுகாதாரம், தொழில் மற்றும் கண்டுபிடிப்புகளில் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ள இந்தியாவின் கூட்டு மதிப்பெண் ஆனது 2018 ஆம் ஆண்டில் 57 ஆக இருந்து 2019 ஆம் ஆண்டில் 60 ஆக உயர்ந்துள்ளது.
  • இருப்பினும், இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் தொடர்ந்து பிரச்சனைகளாக உள்ள ஊட்டச்சத்து மற்றும் பாலினம் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து அதிக கவனம் செலுத்தும் அணுகுமுறை தேவைப் படுகின்றது.
  • இதன் முதல் அறிக்கையில் 13 இலக்குகள் மற்றும் 39 குறிகாட்டிகள் இருந்தன.
  • ஐ.நா. அமைப்பு கோடிட்டுக் காட்டிய 306-ல் 100 குறிகாட்டிகளில் அடங்கியுள்ள 54 இலக்குகளின் அடிப்படையில் இந்த ஆண்டு மாநிலங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

மாநிலங்களின் தர வரிசை

  • ஒட்டுமொத்த SDG குறியீட்டில் 70 மதிப்பெண்களுடன் கேரள மாநிலமானது முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் 69 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.
  • ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 67 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.
  • ஒன்றியப் பிரதேசங்களிடையே சண்டிகர் ஆனது 70 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • பீகார் மாநிலமானது மிக மோசமான செயல்பாடு கொண்ட மாநிலமாக உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு முதலாக மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காட்டும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • உத்தரப் பிரதேசம் 29வது இடத்திலிருந்து 23வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • ஒடிசா 23வது இடத்திலிருந்து 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மற்றும் சிக்கிம் 15வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முன்னணியில் உள்ள மாநிலங்கள்

  • 2018 ஆம் ஆண்டில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் பிரிவில் (65-99 மதிப்பெண் வரம்பு) இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில், இந்தப் பிரிவில் மேலும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, சிக்கிம் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்கள் இணைந்ததன் மூலம் இதன் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
  • மாநிலங்களானவை அவற்றின் மதிப்பெண்களின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
    • 0 முதல் 49 வரை – செயல்பட வேண்டிய மாநிலங்கள்
    • 50 முதல் 64 வரை – செயல்படும் மாநிலங்கள்
    • 65 முதல் 99 வரை – முன்னணியில் உள்ள மாநிலங்கள்
    • 100 மதிப்பெண்கள் – சாதனை படைத்த மாநிலங்கள்

SDG பற்றி

  • 2020 ஆம் ஆண்டானது ஐ. நா பொதுச் சபையில் உள்ள 193 நாடுகளால் SDG இலக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவாகும்.
  • SDG ஆனது 17 இலக்குகளையும், அது தொடர்புடைய 169 இலக்குகளையும் 2030 ஆம் ஆண்டிற்குள் அடைய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்