சமீபத்திய நிலையான மேம்பாட்டு அறிக்கை (SDR) ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டுத் தீர்வுகள் வலையமைப்பினால் வெளியிடப்பட்டது.
2025 ஆம் ஆண்டு SDG குறியீட்டில் இடம் பெற்ற 167 நாடுகளுள், 2024 ஆம் ஆண்டில் 109வது இடத்தில் இருந்த இந்தியா 67 மதிப்பெண்களுடன் 99வது இடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் உள்ள முதல் 100 நாடுகளுள் ஒன்றாக இந்தியா இடம் பிடித்தது இதுவே முதல் முறையாகும்.
சீனா 74.4 மதிப்பெண்களுடன் 49வது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா 75.2 புள்ளிகளுடன் 44வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில், பூடான் 70.5 புள்ளிகளுடன் 74வது இடத்திலும், நேபாளம் 68.6 புள்ளிகளுடன் 85வது இடத்திலும், வங்காளதேசம் 63.9 புள்ளிகளுடன் 114வது இடத்திலும், பாகிஸ்தான் 57 புள்ளிகளுடன் 140வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவின் கடல்சார் அண்டை நாடுகளான மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகியவை முறையே 53வது மற்றும் 93வது இடத்திலும் உள்ளன.
2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய வளர்ச்சியில் எந்த ஒரு நாடும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டில் SDG இலக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன.
உலக நாடுகள் 0 முதல் 100 வரையிலான மதிப்பில் மதிப்பிடப்படுகின்றன, இதில் 100 என்பது 17 இலக்குகளும் முழுமையாக அடையப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.