TNPSC Thervupettagam

SVEEP பயிலரங்கம்

April 2 , 2019 2317 days 709 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது 150 சமுதாய வானொலிகளுக்காக முறையான வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பிற்கான (SVEEP - Systematic Voter’s Education and Electoral Participation program) பயிலரங்கத்தை நடத்தியது.
  • இந்தப் பயிலரங்கத்தின் முக்கிய நோக்கம் வாக்காளர்களுக்காக கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சமுதாய வானொலிகளுக்குப் பயிற்சி வழங்குவது மற்றும் அவற்றின் திறனை மேம்படுத்துவதாகும்.
  • சமுதாய வானொலி என்பது உள்ளூர் மக்களுக்குப் பொருத்தமானதாகவும் குறிப்பிட்ட பகுதியின் நலனைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும் ஒரு வகையான வானொலிச் சேவையாகும்.
  • சமுதாய வானொலிகள் பொதுவாக குறைந்த வரம்பு கொண்ட, குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லாப நோக்கில்லா நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்