மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்திற்கான இணை அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு) டாக்டர். ஜிதேந்திர சிங் SWADESH என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
SWADESH திட்டமானது குறிப்பாக இந்திய மக்களுக்கென வடிவமைக்கப்பட்ட முதல் வகையான மிகப்பெரிய பல்முனை நரம்பியல் விவரச் சேகரிப்புத் தரவுத் தளமாகும்.
இந்தத் தனித்துவமிக்க மூளை அறிவியல் சார்ந்த முன்னெடுப்பானது ஹரியானாவின் குர்காவ்ன் நகரிலுள்ள உயிரித் தொழில்நுட்பத் துறையின் தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தினால் உருவாக்கப்பட்டது.