TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 16 , 2025 15 days 59 0
  • M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) உருவாக்கிய மீனவர்களுக்கு உகந்த கைபேசி செயலி, அபுதாபியில் நடைபெற்ற IUCN உலக வளங்காப்பு மாநாட்டில் Tech4Nature விருதை வென்றது.
  • குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுவான சித்தி என்ற சமூகத்தினர் 72 சதவீதத்திற்கும் மிக அதிகமான கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளனர்
  • இந்தியா புது டெல்லியில் ஐக்கிய நாடுகளின் படைப் பிரிவுகளுக்கான பங்களிப்பு நாடுகளின் (UNTCC) தலைவர்கள் மாநாட்டை நடத்துகிறது.
  • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்டியதன் மூலம், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார்.
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது மும்பையில் கோல்டன் ஸ்வீப் நடவடிக்கை என்ற தங்கக் கடத்தல் வழக்கில் 13 பேரைக் கைது செய்தது.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆஸ்திரேலியாவின் பெர்த் என்னுமிடத்தில் நான்காவது AUSTRAHIND 2025 பயிற்சியை நடத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்