TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 23 , 2026 4 days 48 0
  • ஸ்டோர்ஃப்ரெண்ட்லி ஆசியாவின் இணை நிறுவனர் ஆர்தர் லா உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) 2026 ஆம் ஆண்டின் இளம் உலகளாவிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • ஆப்பிள் நிறுவனமானது 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகும் டிம் குக்கிற்குப் பதிலாக, ஜான் டெர்னஸை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமித்து உள்ளது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IARI) இயக்குனர் டாக்டர் செருகுமல்லி சீனிவாச ராவ், பருவநிலையைத் தாங்கும் வேளாண்மை குறித்த தனது பணிக்காக ஹைதராபாத்தில் 9வது பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் விருதைப் பெற்றார்.
  • ஆங்கில மொழி மற்றும் அதன் உலகளாவிய முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று ஐ.நா ஆங்கில மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஸ்பானிஷ் மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று ஐ.நா ஸ்பானிஷ் மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்