தலைமைப் பதிவாளர் அலுவலகம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகமானது, 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 1855 என்ற உதவி எண்ணை ஆனது நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் கைவினை மரபுகளை மேம்படுத்தவும், நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கவும் இந்திய மத்திய குடிசைத் தொழில் கழகம் தனது முதல் பாரம்பரிய ஆடை வடிவமைப்பான “சோல் த்ரெட்ஸ்” (Soul Threads) என்பதை அறிமுகப்படுத்தி உள்ளது.
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) ஆதரவுடன் செயல்படும் அரசாங்க ஆதரவு பெற்ற 'பாரத் டாக்ஸி' செயலியானது, கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு கமிஷன் இல்லாத, நியாயமான கட்டணத்திலான சேவைகளை வழங்குகிறது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது, SMILE (விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவு ஆதரவு) திட்டத்தின் கீழ், நிகழ் நேரத் தரவுகள் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக SMILE – இரவலர் கணக்கெடுப்பு அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடத்திய பிறகு, 2026 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா கோவாவில் நடத்த உள்ளது,.
இதற்கு முன்னதாக, 1999 ஆம் ஆண்டு கோவாவில் ஆடவருக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
அமைதி, ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய முடிவெடுப்பதை மேம்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபையில் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பங்கை அங்கீகரிக்கும் விதமாக, ஆண்டுதோறும் ஏப்ரல் 25 அன்று சர்வதேசப் பிரதிநிதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பணியிட விபத்துகளைத் தடுப்பதையும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணி நிலைமைகளை உறுதி செய்வதையும் ஊக்குவிப்பதற்காக, சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 அன்று பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Good psychosocial working environments: A pathway to thriving workers and strong organizations" என்பதாகும்.