TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 13 , 2026 16 hrs 0 min 70 0
  • ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையானது, அடிப்படைத் தொழில்நுட்ப (Deep-Tech) ஆராய்ச்சி மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மென்லோ பூங்காவில் தனது முதல் சர்வதேச மையத்தை நிறுவியுள்ளது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான ஆர்க்கிபால்ட் பரிசு, மெல்போர்னைச் சேர்ந்த கலைஞர் ரிச்சர்ட் லூயருக்கு இலுவந்தி கென்னின் உருவப்படத்திற்காக வழங்கப்பட்டது.
    • இது 1921-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் ஆஸ்திரேலிய உருவப்படக் கலை விருதாகும் என்பதோடு இது உருவப்பட ஓவியத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.
  • அமெரிக்க தரவு அறிவியல் சபையின் (DASCA) அங்கீகாரத்தைப் பெற்ற இந்தியாவின் முதல் சிறப்பு நிறுவனம் (IoE) என்ற பெருமையை ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக் கழகம் (JGU) பெற்றுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பாஜக அரசை வழி நடத்த சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பதவியேற்றார்.
  • ஹிமந்த பிஸ்வா சர்மா 2026 ஆம் ஆண்டு மே 12 அன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக அஸ்ஸாம் முதலமைச்சராகப் பதவியேற்றார் என்பதோடு இதன் மூலம் இப்பதவியில் தொடர்ந்து இருமுறை பணியாற்றும் முதல் காங்கிரஸ் அல்லாத தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
  • தாவர ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Plant Biosecurity for Food Security" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்