இந்திய வம்சாவளி இயற்பியலாளரான ஜெயனேந்திர கே. ஜெயின் 2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான உல்ஃப் பரிசை வென்றுள்ளார்; இதன் மூலம் இப்பெருமையைப் பெறும் முதல் இந்திய வம்சாவளியைச் சார்ந்த அறிவியலாளர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 'தி ஈபிளேன் கம்பெனி' எனும் நிறுவனமானது, இந்தியாவின் முதல் முழு அளவிலான மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறங்கும் (eVTOL) விமானத்தின் முன்மாதிரியை e200X (PT-01) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
e200X விமானமானது வான்வழி டாக்ஸி சேவைகள், சரக்கு போக்குவரத்து மற்றும் வான்வழி அவசர மருத்துவ ஊர்திச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறு FIFA உலகக் கோப்பைகளில் கோல் அடித்து வரலாற்றில் முதல் கால்பந்து வீரர் ஆனார்; இவர் 2006, 2010, 2014, 2018, 2022 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பதிப்புகளில் கோல் அடித்துள்ளார்.
டாப்500 பட்டியலின் (ஜூன் 2026 பதிப்பு) முதலிடத்தில் உள்ள சீனாவின் LineShine மீத்திறன் கணினி, தனிப்பயன் செயலி கட்டமைப்பு மற்றும் சுமார் 13.79 மில்லியன் மையங்களைக் கொண்ட CPU மட்டுமே உள்ள அமைப்பாகும்.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (உலக போதைப்பொருள் தினம்) ஆனது, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு World drug problem: persisting issues, new challenges, innovative responses என்பதாகும்.
சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கான ஆதரவு சர்வதேச தினமானது, சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உலகளவில் சித்திரவதையை ஒழிப்பதை ஊக்குவிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு Torture: a crime against humanity என்பதாகும்.
குளிர்பதனம், காற்றுச்சீரமைப்பு மற்றும் வெப்பப் பம்ப் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று உலக குளிர்பதன தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு Cool Intelligence என்பதாகும்.