தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் (IPRC), அரை-குளிர்நிலை இயந்திரத்தின் ஆற்றல் பகுதி சோதனை மாதிரிகளின் (PHTA) 175 டன் வெப்பச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியது.
தனது 90வது ஆண்டு விழா மற்றும் இந்தியாவில் வானொலி ஒலிபரப்பின் வரவிருக்கும் 100 ஆண்டுகளை (2027) குறிக்கும் வகையில், 'ஸ்வர் பிரேர்ணா வீதிகா' (Swar Prerna Veethika) என்ற நிரந்தர புகைப்படக் கண்காட்சியை ஆகாஷ்வாணி திறந்துள்ளது.
1936 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பாளராக செயல் பட்டு வருகின்ற ஆகாஷ்வாணி செவ்வியல், நாட்டுப்புற, பக்தி மற்றும் பிராந்திய இசைக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.
கோவாவில் உள்ள கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் (GSL), புதிய தலைமுறை விரைவு ரோந்துக் கப்பலான (FPV) ICGS அக்சய், இந்திய கடலோரக் காவல்படையில் (பாரதிய தத்ரக்சக்) இணைக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் இந்தியாவின் முதல் கடல்சார் விமான நிலையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மும்பை பெருநகரப் பகுதிக்கான (MMR) மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக செயல்படும் இந்த விமான நிலையம் பால்கர் மாவட்டத்தில் உள்ள கோர் கடற்கரைக்கு அருகே திட்டமிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீஷெல்ஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) அறிமுகப்படுத்துவதற்காக இந்தியாவும் சீஷெல்ஸும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
குடிநீர் வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்காக ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்கள் யமுனை நதிநீர் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மேல் யமுனைப் படுகையின் பயன்படுத்தக்கூடிய மேற்பரப்பு நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்த 1994 ஆம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளைக் குறைப்பது மற்றும் துணி, சணல், காகிதப் பைகள் போன்ற மீண்டும் பயன்படுத்தக் கூடிய மாற்றுப் பொருட்களை ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 அன்று சர்வதேச நெகிழிப் பை இல்லாத தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Breaking Free from Single-Use Plastics: Towards a Sustainable Future என்பதாகும்.