TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 24 , 2026 3 days 41 0
  • குஜராத்தின் கவ்டா சூரியசக்தி பூங்காவில் இந்தியாவின் முதல் 100 MWh பயன்பாட்டு அளவிலான வனேடியம் ரெடாக்ஸ் ஓட்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (VRFB BESS) திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க அருணாச்சலப் பிரதேசத்தில் 1,000 மெகாவாட் (MW) நயிங் நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இத்திட்டம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியாங் நதிப் படுகையின் துணை நதியான நயிங் ஆற்றின் குறுக்கே உருவாக்கப்படும்.
  • லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் நடைபெற்ற 37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் (IBO) 2026-ஆம் ஆண்டில் இந்தியா 1 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.
    • பவ்யா குன்வால் (அரியானா) தங்கப் பதக்கத்தையும், சௌமில் மைட்டி (மேற்கு வங்கம்), நிஷித் கலானி (ராஜஸ்தான்) மற்றும் அன்மோல் குமார் (பஞ்சாப்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.
  • டைகர் லைட்னிங் 2026 என்பது வங்கதேச ஆயுதப் படைகளுக்கும் அமெரிக்க பசிபிக் இராணுவப் படைக்கும் (USARPAC) இடையே ஆண்டுதோறும் நடைபெறும் 13 நாள் இரு தரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
    • இந்த ஆண்டுக்கான பயிற்சி வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள ஜலாலாபாத் இராணுவ முகாமில் நடைபெற்றது.
  • 1927-ஆம் ஆண்டில் இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட வானொலி ஒலிபரப்பு தொடங்கியதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23 அன்று தேசிய ஒளிபரப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • இந்திய ஒலிபரப்பு நிறுவனமானது (IBC) தனது முதல் வானொலி சேவையை 1927 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று தொடங்கிய பின்னர் 1936-ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியாக (AIR) உருவானது.
  • மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2026 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று உலக மூளை தினம் கடைபிடிக்கப் படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு Brain Health: Access For All என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்